நீர்நிலைகளில், சட்ட விரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மணலை எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை மீறி செங்கற் சூளைகள் சட்ட விரோதமாக அதிகளவில் வண்டல் மண் அள்ளுவதாக திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சட்ட விரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது. ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Discussion about this post