வங்கிகளின் வாரக்கடன் கடந்த நிதி ஆண்டை விட 7.94% குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் முடிவில் அரசு நேரிடையாக தலையிடுவதில்லை என்று கூறியுள்ளார். வங்கிகளின் சீரான செயல்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வங்கிகள் வராக்கடன் 8.65 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 7.9 லட்சம் கோடி ரூபாயாக கிட்டத்தட்ட 7.94% குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். சிறு, குறு வங்கிகளுக்காக அறிவிக்கப்பட்ட கடன் சலுகைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், 250 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்கி வருவதாகவும், நஷ்டத்தில் இயங்குக் பொதுத்துறை வங்கியின் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
Discussion about this post