தாராபுரத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் குடிநீர் பிரச்சனையை போக்கும் வகையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அமராவதி அணையிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட தண்ணீர், தாராபுரம் அமராவதி ஆற்றை வந்தடைந்தது. பொதுமக்கள் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். தமிழக அரசிற்கு பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post