கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால் கே.ஆர்.எஸ், மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 10 ஆயிரத்து 441 கனஅடி நீரும், கபினி அணையிலிருந்து 3 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியிலிருந்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. ஒக்கேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து 41 வது நாளாக அருவியில் குளிக்கவும், 13 வது நாளாக பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.