பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த மூன்று மாத காலமாக கடும் வறட்சி நிலவியதால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக தற்போது அணைக்கு நீர்வரத்து 13 கன அடியாக உள்ளது. அணையின் மொத்த உயரம் 126 புள்ளி 28 அடி ஆகும். நீர் இருப்பு 45 புள்ளி 9 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்பொழுது நீர் மட்டம் 86 புள்ளி 10 அடியாக உள்ளது. அணையிலிருந்து நாள்தோரும் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து, இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயனுள்ளதாக அமையும் என பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post