காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 600 கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் உபரிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வினாடிக்கு 650 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், 600 கனஅடியாக குறைந்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அருவியில் குளிக்க 198வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post