மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியது. அணைக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இன்று காலை அணையின் நீர்மட்டம் 114.85 அடியாகவும், நீர் இருப்பு 83. 4 அடியாகவும் இருந்தது. தற்போது, அணையின் நீர் வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ளதால், நீர்மட்டம் 115.11 அடி ஆக உயர்ந்தது. இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து 10 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் 3 நாட்களில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
Discussion about this post