கே.ஆர்.எஸ் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 20 அடி அதிகரித்துள்ளது. அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 1.13 லட்சம் கனஅடியாக உள்ளது. நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post