கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி, கபினி அணையில் இருந்து விநாடிக்கு 80 அயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63 ஆயிரம் கனஅடி நீரும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70 அயிரம் கனஅடியில் இருந்து, ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால். நீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியில் இருந்து 60 அயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119.08 அடியாகவும், நீர் இருப்பு 95.01 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டும் பட்சத்தில், 40 வது முறையாக அணை, தனது முழு கொள்ளவை எட்டும் என்ற பெயர் பெரும். இதனிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் வந்துாகண்டிருப்பதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: 120 அடிநீர்மட்டம்மேட்டூர் அணை
Related Content
நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!
By
Web Team
October 13, 2020
169 நாட்களுக்கு பிறகு, மேட்டூர் அணை கதவணைகள் நாளை மூடப்படுகிறது
By
Web Team
January 27, 2020
தமிழகத்தில் தொடர் கனமழையால் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது
By
Web Team
December 4, 2019
வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
By
Web Team
December 3, 2019
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
By
Web Team
November 28, 2019