ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் 105 நாட்கள் கடந்தும் 100 அடிக்கும் கீழ், நீர் இருப்பு குறையாமல் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
2019ம் ஆண்டு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் பவானி சாகர் அணை 3 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனை தொடந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி, தமிழக அரசு கடந்த மாதங்களில் சாகுபடிக்காக 2 முறை நீர் திறந்து நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், தற்போது 105 நாட்களை கடந்தும் பவானி சாகர் அணை 100 அடிக்கும் கீழ், நீர் மட்டம் குறையாமல் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதன்படி அணையின் நீர் மட்டம் 102.41 கன அடியாகவும், நீர் இருப்பு 30.6 டி.எம்.சியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 694 கன அடியாகவும் உள்ளது. குடிநீருக்காக 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி நீர் உட்பட, மொத்தம் 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post