காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,000 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும் 7 ஆயிரத்து 43 கன அடியாக இருந்த நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 5 அயிரம் கன அடி நீரும், கிழக்கு, மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் நீர்வரத்து முழுவதும் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post