திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே 24 மணிநேரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்த்த எம்.எல்.ஏ. மற்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிய நிலையில், இதுகுறித்து கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதை பரிசீலித்த அவர், உடனடியாக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மனு அளித்த 24 மணி நேரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைத்த தமிழக அரசு மற்றும் கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post