இணையதளத்தில் தீர்ப்பு விவரங்களை, தமிழ் மொழியிலும் பதிவேற்ற விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வந்தன. இந்தநிலையில் கடந்தாண்டு நவம்பரில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இதனிடையே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் மொழி அல்லாத பிறமொழிகளில் பதிவேற்றப்படும் என செய்திகள் பரவின. இதற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழிலும் மொழிமாற்றம் செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், அதில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து மாநில மொழிகளிலும் மொழிமாற்றப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post