வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்த முறை அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேட்புமனுத் தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது.
மொத்தம் 50 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு பரிசீலனை வெள்ளியன்று நடைபெறும் நிலையில், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு 22ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வரும் 24ஆம் தேதி நடைபெறுவதால், அன்றைய தினம், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post