தீவிரவாதிகளை தொடர்ந்து ஆதரித்துவரும் பாகிஸ்தானுக்கு, ஒருடாலர் கூட நிதியாக அமெரிக்கா கொடுக்காது என்று ஐநாவின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் அமைச்சரவை அந்தஸ்து பதவிக்கு முதல்முறையாக நியமிக்கப்பட்ட இந்திய பெண் நிக்கி ஹாலே. அமெரிக்க ராணுவ வீரர்களை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து கொன்று குவித்து வருவதாக நிக்கி ஹாலே குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்து நாடுகளுடன் நட்புடன் இருக்கும் அமெரிக்காவுக்கு, தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு, ஒருடாலர் கூட நிதி கொடுக்க தேவையில்லை என்று கூறிய நிக்கி ஹாலே, அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்று குவிக்கும் செயலை சரிசெய்யும் வரை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி கொடுக்காது என்று கூறியுள்ளார்.
Discussion about this post