தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என்ற ஹபீஸ் சையத்தின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்தது. மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஜமாத் உத் தவா அமைப்புக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்திருந்தது. தற்போது, வீட்டுக் காவலில் உள்ள ஹபீஸ் சையத், தனது பெயரை தீவிரவாதிகள் தடை பட்டியலில் இருந்து நிக்கும்படி ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதே சமயம், பாகிஸ்தான் அரசு, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் ஹபீஸ் சையத்தின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்தது.
Discussion about this post