சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான உத்தரவிற்கு கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம் போர்டு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான உத்தரவிற்கு கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம் போர்டு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளது.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு காலஅவகாசம் கோரி நாளை மனுதாக்கல் செய்ய உள்ளதாக தேவசம் போர்டின் தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் சந்திர உதய்சிங் மூலமாக மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சட்டவல்லுநர்களுடன் தேவசம் போர்டு உறுப்பினர்கள் கலந்தாலோசித்த பின்னரே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
கேரள அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உத்தரவை உடனடியாக அமல்படுத்த இயலாததை அடுத்து தேவசம் போர்டு இத்தைகைய முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post