இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு திருச்செந்தூர் அருகே ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சார்பாக விண்ணில் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் இருக்கின்றன. மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்த நிலையில் விஞ்ஞானி நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினரால் புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்செந்தூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதிகளிலுள்ள நில அளவீடுகள் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post