ஆளில்லாத வீட்டிற்கு வந்த பார்சலை திருடிவிட்டு , அதற்கு பதில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ள வினோத சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிலாரி ஸ்மித் என்கிற பெண் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் முதலாளிக்கு பரிசு கொடுப்பதற்காக ஆன்லைனில் செல்போன் சார்ஜர் ஆர்டர் செய்துள்ளார்.
இந்நிலையில் ஆர்டர் டெலிவரி ஆகி விட்டது என்று ஹிலாரிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் வந்துள்ளது. இதனையடுத்து பணியில் முடிந்து வீடு திரும்பிய அவர், வாசலில் பார்சலை தேடியுள்ளார்.
ஆனால் அதற்கு பதிலாக அங்கு ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், உங்களுடைய பொருளைத் திருட எனக்கு வாய்ப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி என்றும், இப்படிக்கு உங்களுடைய பொருளின் புதிய உரிமையாளர் என்றும் எழுதப்பட்டு இருந்துள்ளது.. இச்சம்பவம் குறித்து இணையதளத்தில் திருடர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்து பதிவிட்டுள்ளார்
Discussion about this post