தமிழக அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதத்தை, சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடத்தி வரும் போராட்டம் உழைக்கும் ஏழை, எளிய மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு நனவாகியுள்ளதாக கூறினார்.
Discussion about this post