தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. பல ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நாசமாகின. பயிர் சேதங்களை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வந்தனர்.
இந்த கணக்கெடுப்புகளை அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களை கொண்டு கணக்கெடுப்பு அலுவலர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.