இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 60 பொருட்கள் மற்றும் 11 சேவைகளுக்கான வரியை குறைக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 5 ஆயிரத்து, 500 கோடி ஐ.ஜி.எஸ்.டி நிலுவை தொகையை வழங்க மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாக கூறினார்.
Discussion about this post