ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு அறிவித்த 10 கோடி ரூபாய் நிவாரணத் தொகை அம்மாநில அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநில மக்களுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாயை வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித் குமார் மொஹந்தியிடம் 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மக்களுக்கு தமிழக மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post