ராஜிவ் குடும்பத்தினரின் வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் வரும் 12ம் தேதி 6வது கட்டமாக மக்களவை தேர்தல் மொத்தம் 59 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. டெல்லியில் 7 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பாஜக ஆட்சியில் நாடு பல முன்னேற்றங்களை கண்டுள்ளதாக பேசிய அவர், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களின் பலம், உத்வேகம் மற்றும் ஆற்றல் அனைத்தும் டெல்லிதான் என்று கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
ராஜிவ் மற்றும் அவரது குடும்பத்தினர் தனித் தீவிற்கு சொகுசு பயணம் சென்றபோது 10 நாட்கள் ஐ.என்.எஸ். விராட் என்ற கடற்படை கப்பலை தங்களது சொந்த பயணத்திற்கு பயன்படுத்தியுள்ளனர், அப்போது வெளிநாட்டினரும் விராட் கப்பலில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
Discussion about this post