இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தை வழிநடத்தும் சிறப்புக் குழுவை நியமிப்பதற்காக அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கி விட்டு புதிய பிரதமராக ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார்.இதையடுத்து இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ராஜபக்சே அரசின் மீது இரண்டு முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் ராஜபக்சே அரசு தோல்வியடைந்தது. ஆனால் இந்த தோல்வியை ராஜபக்சேவும் சிறிசேனாவும் ஏற்க மறுத்து விட்டனர்.
இதனிடையே ரணில் விக்ரமசிங்கே கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ரணிலுக்கு ஆதரவாக சிலரும், கட்சியின் இணைத்தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில் நாடாளுமன்றத்தை வழி நடத்துவதற்காக 15 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்படுகிறது. இந்த சிறப்புக்குழுவில் தங்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களையே அதிகம் நியமிக்க வேண்டும் என ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு கட்சியும் இப்படி வலியுறுத்துவதால் கூட்டம் சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Discussion about this post