தென் மேற்குப் பருவமழை 8ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் தாமதமாகியுள்ளது. வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், கேரளத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post