ஓரியன் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிவப்பு நிற நட்சத்திரமான பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புதிய படங்களில் சிவப்பு நிறத்தில் காணப்படும் மிகப்பெரிய நட்சத்திரமான பெட்டல்ஜியூஸ் வடிவத்தை மாற்றுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இப்போது அதன் இயல்பான பிரகாசத்தில் வெறும் 36 சதவீதம் மட்டுமே உள்ளது. பூமியிலிருந்து 642.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த நட்சத்திரம், விரைவில் வெடித்து சிதற வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அவ்வாறு வெடித்தால் பூமிக்கு அருகே நிகழும் மிகப்பெரிய சூப்பர்நோவாவாக இது இருக்கும். ஒரு சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரம் ‘இறக்கும் போது ஏற்படும் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திர வெடிப்பு ஆகும். இதுகுறித்து வானியல் அறிஞர்கள் பெட்டல்ஜியூஸ் வெடிக்கிறதா என்று உன்னிப்பாக கவனித்து கொண்டு வருகிறார்கள்.
Discussion about this post