சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு, தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க விரும்பும் மகனின் விண்ணப்பத்தின் மீது சாதகமான உத்தரவு பிறப்பிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த 53 வயதான வாணி என்பவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தர மகன் செந்தில்குமார் விரும்புகிறார். அதற்கு தேவையான தடையில்லா சான்றுகளை புதுச்சேரி மாநில அரசு வழங்கியுள்ளது. ஆனால், மருத்துவமனை விதிகளின்படி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அனுமதியளிக்கும் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும்.
இதற்காக அனுமதி கோரி விண்ணப்பித்த செந்தில்குமார், மனைவி தன்னை பிரிந்து வாழ்வதால், தனது கோரிக்கையை அக்குழு நிராகரித்து விடும் என அஞ்சி, ஒப்புதல் வழங்க குழுவுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, செந்தில்குமாரின் கதையைக் கேட்டு கண்கலங்கினார்.
பின், மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதைக் குறிப்பிட்டு, குழுவில் மனுத் தாக்கல் செய்யும்படி, செந்தில்குமாருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அவரது விண்ணப்பத்தின் மீது அனுமதியளிக்கும் வகையில் சாதகமான உத்தரவை பிறப்பிக்கும்படி உத்தரவிட்டார்.
Discussion about this post