சிமி இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 1977ம் ஆண்டு துவக்கப்பட்ட சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்திற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளன. மக்களின் மனதை மாசுப்படுத்தும் செயல்களில் இந்த அமைப்பு ஈடுபடுவதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி சிமி அமைப்பிற்கு மத்திய அரசு பல காலகட்டங்களில் தடை விதித்து வருகிறது.
2001ம் ஆண்டில் இந்த அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டில் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அமைப்பின் சட்டவிரோத செயல்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிமி அமைப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Discussion about this post