பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தைப்பூசத் திருவிழா வருகிற 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. வரும் 21ம் தேதி முக்கிய விழாவான தைத்தேரோட்டம் நடைபெறுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் பழனி வரும் பக்தர்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறை மற்றும் பழனி கோவில் நிர்வாகமும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் பழனியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அடிவாரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும், எளிதில் தீப்பற்றக் கூடிய சிலிண்டர் மற்றும் அடுப்புகளை பயன்படுத்த அனுமதிக்க தடை விதிக்குமாறு நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.
Discussion about this post