இந்தியாவை காப்பாற்ற ஆட்சி மாற்றம் அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 12 அடியில் நிறுவப்பட்டுள்ள லெனின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டினார். இந்தியாவை காப்பாற்ற ஆட்சி மாற்றம் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post