திருப்பூரில் எவர்சில்வர் பாத்திர வியாபாரி ஒருவர், தமிழ் மொழியின் மீதுள்ள ஆர்வத்தால், கவிதை எழுதி அசத்தி வருகிறார்.
திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாத்திர வியாபாரி ஜோதி. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சில்வர் பாத்திரங்களை வீதி வீதியாக சென்று விற்பனை செய்துவரும் இவருக்கு, சிறுவயது முதலே தமிழின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. தனது மனைவியுடன் பெங்களூர் சென்று அங்கு பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டுவந்த இவர், தனது பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மறந்துவிடுமோ என்ற அச்சத்தில், திருப்பூருக்கு வந்து குடியேறியுள்ளார். தமிழின் மீதான ஆர்வம் குறையாததால், தான் பாதிக்கப்படும் சம்பவங்களை விவரித்து கவிதையாக எழுதி வரும் இவர், கவிதை மட்டுமல்லாது பாடல்களையும் எழுதியுள்ளார். தற்போது சில்வர் பாத்திரங்களை வீடு வீடாக சென்று விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொழில் மாறினாலும் அவரது தமிழ் ஆர்வம் மாறாததை உணர்த்தும் விதமாக, ஒரு சாமானியரின் கவிதை என்ற புத்தகம் எழுதியுள்ளார். பல இலக்கிய போட்டிகளில் பரிசுகளை வென்ற ஜோதி, சுமார் 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கவிதை எழுதியுள்ளார்.
Discussion about this post