மிடில்செக்ஸ் பல்கலைகழகம் சார்பில் பெப்பர் என்ற ரோபோ தயாரிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு குறித்த அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றி அசத்தியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதிலளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
நான்காவது தொழில் புரட்சி, புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், வகுப்பறைகளில் ரோபோக்களின் பயன்கள் ஆகியவற்றை குறித்தும் பெப்பர் ரோபோ உரையாற்றியது.
இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய முதல் ரோபோ என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
Discussion about this post