இன்று ஓய்வு பெற்ற சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனர் டி.கே. ராஜேந்திரனுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையின் இயக்குனராக பணியாற்றி வந்த டி.கே. ராஜேந்திரனுக்கு இன்றுடன் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய சட்டம் ஒழுங்கு காவல்துறையின் 29ஆவது இயக்குனராக பதவியேற்ற திரிபாதியிடம் தனது அலுவல் பொறுப்புக்களை டி.கே. ராஜேந்திரன் ஒப்படைத்தார். சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து விடைபெற்ற அவருக்கு, சம்பிரதாயப்படி அவரின் காரை, அலங்கரித்த கயிறு மூலம் காவல்துறை அதிகாரிகள் இழுத்து விடை கொடுத்தனர். இவ்வாறு கயிறு மூலம் இழுத்து விடையனுப்புவது என்பது மரியாதை செலுத்தும் பண்பாக கருதப்படுகிறது.
Discussion about this post