ஈரோட்டில் தேசிய வங்கியானது வாடிக்கையாளரிடமிருந்து பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி மதி. இவர் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தேசிய வங்கியில் 34 பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் இதனை வாங்க மறுத்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் வந்த நிலையில், மதியிடம் இருந்து வங்கி 10 ரூபாய் நாணயங்களை வங்கி அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்களோ அல்லது வங்கிகளோ வாங்கா விட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேசிய வங்கியே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post