கார்கில் ஊடுருவல் போன்ற தவறை மீண்டும் பாகிஸ்தான் செய்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் கார்கில் போரின் 20வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்று, கார்கில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், 1999ஆம் ஆண்டை போன்று மறுபடியும் ஒரு ஊடுருவலை பாகிஸ்தான் ஒரு போதும் செய்யாது என்று கூறினார். கார்கில் ஊடுருவல் போன்ற தவறை மீண்டும் பாகிஸ்தான் செய்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்தார்.
Discussion about this post