புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், துணை ராணுவப் படையினர், மற்றும் காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், பாதுகாப்பு பணிகளுக்காகச் சென்னையில் இருந்து ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வந்தடைந்தனர். இந்நிலையில் உள்ளூர் காவல் துறையினருடன் இணைந்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் காமராஜ் நகர் தொகுதி முழுவதும் பாதுகாப்பு அணி வகுப்பு நடத்தினர்.
Discussion about this post