உதகையை அருகே தமிழக மற்றும் கர்நாடக எல்லை பகுதியான கக்கனள்ளாவில் உள்ள 88 வருடமான பாலத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கக்கனள்ளாவில் 1930-ம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 88 ஆண்டு பழமை வாய்ந்த பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு சென்று வருகிறது.
இந்நிலையில், பாலத்தின் மேல் இருக்கும் வளைவுகள் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்தப் பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post