ஹாங்காங் போராட்டத்தை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், அதனை அடக்கி ஒடுக்கும் விதமாக சீனா தனது ராணுவத்தை முதன்முறையாக களம் இறக்கியுள்ளது.
ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்கள், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வருகின்றனர்.
இந்த நிலையில், சீன ராணுவத்தின் ஹாங்காங் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹாங்காங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். ஹாங்காங்கில் 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கட்டுப்படுத்த முதல்முறையாக சீனா, ராணுவத்தை களமிறக்கி உள்ளது. இது போராட்டக்காரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
Discussion about this post