காவல்துறையில் பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு தொடங்கப்பட இருப்பதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக காவல்துறையில் புதிய தனிப்பிரிவு தொடங்குவதை பாமக முழுமனதுடன் வரவேற்புத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பது முக்கியமான மைல்கல் என்பதில் ஐயமில்லை என்றும், அதேநேரத்தில் இந்தப் பிரிவு இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்கள் பாதுகாப்புக்காக அதிக எண்ணிக்கையில் மகளிர் காவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், காவலர்கள் நியமனத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post