மருத்துவர் ஆகி ராணுவத்துக்கு சேவையாற்ற விரும்புவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற நாமக்கல் மாணவி கனிகா தெரிவித்துள்ளார். நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகா சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில், 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்தார். இந்நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சியில், வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாணவி கனிகாவை பாராட்டி பேசினார். லாரி ஓட்டுநரின் மகளான கனிகா ஏழை குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் கல்வி பயின்று மருத்துவராகும் லட்சியத்துடன் பயணிப்பதாகவும், அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதுகுறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு மாணவி கனிகா அளித்த பேட்டியில், பிரதமர் மோடி தம்மை பாராட்டி பேசியதை மறக்கவே முடியாது என்றும், தமது வெற்றிக்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
Discussion about this post