சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 26 ஆயிரத்து 248 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 176 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை, கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து கிலோ 41 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post