தங்கம் விலை இதுவரையில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில், ஆபரண தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 25 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 226 ரூபாயாகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 25 ஆயிரத்து 808 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ஆயிரத்து 373 ரூபாய் எனவும், 8 கிராம் 26 ஆயிரத்து 984 ரூபாயாகவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 44 ரூபாய் 10 பைசாவுக்கும், பார் வெள்ளி கிலோ 44 ஆயிரத்து 100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post