மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென் தமிழக மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை,புதுகோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாக கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post