மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி, முடிவடையும் நாள் வரை, கருத்துக் கணிப்புகளை வெளியிட, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கும், ஏப்ரல் 11ம் தேதி காலை 7 மணி முதல், வாக்குப் பதிவு நிறைவுபெறும் மே மாதம் 19ம் தேதி மாலை 6.30 மணி வரையிலும், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் எந்தவிதமான வடிவிலும் கருத்துக்கணிப்பு வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post