பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து போராட்டங்கள் அதிகரித்துள்ளதால் உடுமலை சாலையில் உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை சீரழித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடைபெற்றதால், நேற்று தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 2வது நாளான இன்று உடுமலை சாலையில் உள்ள தனியார் விடுதியில் உள்ள மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post