3 ஆண்டுகளாக 144 தடை உத்தரவு நீடித்து வரும் விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. மக்களவை தேர்தலையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருக்கோவிலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டு முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றனர்.
Discussion about this post