விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பசித்தவர்களுக்கு உணவளிக்கும் இன்பம் உணவகத்தின் மூலம் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்டோர் பசியாறி வருகின்றனர். காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இன்பம் உணவம் வயதானவர்கள், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னம் பகிர்தல் என்ற பெயரில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த உணவகத்தின் உரிமையாளர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் தமிழரசி போஸ், அவர்களின் நண்பர்கள் உதவியுடன் அனுக்கிரகம் என்ற அமைப்பை உருவாக்கி இந்த சேவையை செய்து வருகின்றனர்.
Discussion about this post