புல்வாமா தாக்குதல் குறித்து விசாரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு 2 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் புல்வாமா தாக்குதல் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளவும் அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Discussion about this post