அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகரில் ஜனநாயக முதன்மை விவதாங்களை எதிர்த்து பசுமை புதிய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் டெட்ராய்டின் தெருக்களில் ‘பசுமை புதிய ஒப்பந்தம்’ கோருதல் மற்றும் ஜனநாயக முதன்மை விவாதங்களை எதிர்த்து நகரின் முக்கிய பகுதிகளில் அணிவகுத்துச் சென்றனர். இதில் பல்வேறு கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டவாறு வீதிகளில் அணிவகுத்து சென்றனர். இதில் தொழிற்சாலைகள், பொருளாதாரம் மற்றும் இன நீதி, காலனித்துவம், நீர் உரிமைகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளை வழியுறுத்தி பதாகைகளைத் ஏந்தியவாறு பேரணி நடத்தினர். மேலும் இந்த போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post